விபத்திற்குள்ளான லாரி.. குளிர்பானத்தை மொத்தமாக தூக்கிச்சென்ற மக்கள்.. கோடையில் ஜாக்பாட் அடிச்சா விடுவோமா?.!

விபத்திற்குள்ளான லாரி.. குளிர்பானத்தை மொத்தமாக தூக்கிச்சென்ற மக்கள்.. கோடையில் ஜாக்பாட் அடிச்சா விடுவோமா?.!


telangana-hyderabad-rangareddy-lorry-accident-peoples-g

லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், அதில் இருந்து சாலையில் சிதறிக்கிடந்த குளிர்பானங்களை மக்கள் எடுத்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ரங்காரெட்டி மாவட்டத்தில் குளிர்பானங்களை ஏற்றிச்சென்ற லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. 

இதனால், லாரியில் இருந்த குளிர்பானங்கள் அனைத்தும் சாலையில் சிதறிக்கிடந்த நிலையில், அவற்றில் சேதமடையாத குளிர்பானங்களை அப்பகுதி மக்கள் மொத்தமாக தங்களின் கைகளில் தூக்கி சென்றனர். 

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், ஓட்டுனர் மற்றும் கிளீனரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவருக்கும் லேசான காயமே ஏற்பட்டு இருந்தது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.