கந்துவட்டிக்கு கடன் வாங்கியதால் சோகம்; அதீத விரக்தியில் மாரடைப்பால் ஆட்டோ ஓட்டுநர் மரணம்.!Telangana Hyderabad Auto Driver Died Heart Attack 


அதிர்ச்சி தகவல் மனிதனின் இதயத்தை வெகுவாக பாதிக்கும் எனினும், தொடர் கவலை அதனை கட்டாயம் மாரடைப்பு போன்ற அபாயத்திற்கும் அழைத்துச்செல்லும். 

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், ஹன்மகொண்டா, தர்மசாகர் பகுதியை சேர்ந்தவர் வில்சன் (வயது 48). இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். 

தினமும் இவரின் வருமானத்திலேயே குடும்பம் நடத்தப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், அவசர தேவை காரணமாக வில்சன் கந்துவட்டிக்கு கடன் வாங்கியதாக தெரியவருகிறது. 

இதனால் கடன் கொடுத்தவர் வில்ஸனிடம் அசல் மற்றும் வட்டி என பெருந்தொகையை கேட்டு வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களாகவே அவர் மனஉளைச்சலில் இருந்து இருக்கிறார். 

ஒருகட்டத்தில் உச்சகட்ட மனவேதனைக்கு சென்ற வில்ஸனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரை குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதி செய்தபோது, அவர் மாரடைப்பால் மரணமடைந்தது உறுதி செய்யப்பட்டது. 

இந்த சம்பவம் அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.