சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
3 மாதமாக செலுத்தப்படாத பைக் லோன்; நிதிநிறுவன ஊழியர்களின் கெடுபிடியால் 25 வயது இளைஞர் தற்கொலை.. கதறிய குடும்பம்.!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், குத்புல்லாபூர் பகுதியில் வசித்து வருபவர் லக்ஷ்மன் (வயது 25). இவர் தவணை முறையில் இருசக்கர வாகனம் வாங்கியுள்ளார்.
அதற்கான தவணை தொகையை மாதாமாதம் தவறாது லக்ஷ்மன் செலுத்தி வந்த நிலையில், இறுதியாக 3 மாதங்களுக்கான தொகையை நிதிச்சுமை காரணமாக செலுத்தவில்லை என தெரியவருகிறது.

மீதமுள்ள 3 மாதங்களுக்கும் சேர்ந்து ரூ.20 ஆயிரம் தவணை தொகை நிலுவையில் இருக்க, அதனை கேட்டு நிதிநிறுவன ஊழியர்கள் தொந்தரவு செய்துள்ளனர்.
இதனால் ஒருகட்டத்தில் மனமுடைந்து போன லக்ஷ்மன், அங்குள்ள மைசம்மாகுடா கிராமத்தில் இருக்கும் ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
அவர் தற்கொலை செய்த தகவலை அறிந்து வந்த குடும்பத்தினர் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.