கிரெடிட் கார்ட் கடன் தொல்லையால் பரிதாபம்; தம்பதி தற்கொலை.. 2 குழந்தைகள் தவிப்பு.!

கிரெடிட் கார்ட் கடன் தொல்லையால் பரிதாபம்; தம்பதி தற்கொலை.. 2 குழந்தைகள் தவிப்பு.!


telangana-couple-suicide-after-credit-card-loan

 

கடன் தொகையை செலுத்திவிடலாம் என்ற நம்பிக்கையில் தம்பதிகள் மேற்கொண்ட நடவடிக்கை பொய்த்துப்போக, இறுதியில் குழந்தையை தவிக்கவிட்டு இருவர் தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேட்சல், கீசரா பகுதியை சேர்ந்தவர் ராகுலா சுரேஷ் குமார் (வயது 45). இவரின் மனைவி பாக்யா (வயது 41). தம்பதிகளுக்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் ஆவார்கள். இவருக்கு 2 மகன்களும் குழந்தைகளாக இருக்கின்றனர். 

இந்நிலையில், தம்பதிகள் வீடு கட்டுவதற்கு ரூ.8 இலட்சம் வரை க்ரெடிட் கார்ட் வாயிலாக கடன் பெற்றதாக தெரியவருகிறது. கடன் தவணையை சரிவர செலுத்தாத காரணத்தால் கடனை வசூலிக்க வந்த நபர்கள், இவர்களை அவமானப்படுத்தும் நோக்கில் அக்கம்-பக்கத்தினர் முன்பு தகராறு செய்துள்ளனர். 

Telangana

இதனால் தம்பதிகள் மனமுடைந்துபோன நிலையில், பாக்யா விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். அவரின் கணவர் சுரேஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.