பள்ளியில் உல்லாசமாக இருந்த ஆசிரியர்கள்...!! வீடியோ எடுத்து வைரலாக்கிய மாணவன்...!!

பள்ளியில் உல்லாசமாக இருந்த ஆசிரியர்கள்...!! வீடியோ எடுத்து வைரலாக்கிய மாணவன்...!!


teachers-who-had-fun-at-school

ஆந்திர மாநிலத்தில் ஒரு பள்ளியில் ஆசிரியையுடன், தலைமை ஆசிரியர் உல்லாசமாக இருந்ததை, மாணவன் ஒருவன் ரகசியமாக வீடியோ எடுத்து தனது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளான். 

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மசூலிப்பட்டணம் சிலகுலபொடியில் அரசு உருதுமொழி உண்டு உறைவிடப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். ஆனந்த்பிரசாத் (48) என்பவர் இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்து வருகிறார். அங்கு ஒப்பந்த ஆசிரியை ஒருவரும் பணி புரிந்து வருகிறார்.

பள்ளியில் இரண்டு ஆசிரியர் மட்டும் உள்ளதால் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி பழகியுள்ளனர். இதனால் இந்நிலையில் அவர்களுக்கு இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. பள்ளி நேரம் முடிந்ததும் ஆனந்த் பிரசாத், ஆசிரியையை தனது அறைக்கு அழைத்துச்சென்று அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். அவர்கள் இப்படி இருப்பதை பார்த்த சில மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த  விஷயம் பள்ளியில் இருக்கும் மற்ற மாணவர்களுக்கும் தெரிய வந்தது. 

இந்நிலையில் மாலை பள்ளி முடிந்ததும் வழக்கம்போல் இருவரும் தலைமை ஆசிரியர் அறைக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். இதை பார்த்த மாணவன் ஒருவன் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளான். மாணவன் வீடியோ எடுப்பதை பார்த்த இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். தங்களது அந்தரங்க செயலை வீடியோ எடுத்த மாணவனை அழைத்த தலைமை ஆசிரியர், மாணவனை பிரம்பால் தாக்கியுள்ளார்.  மேலும் செல்போனை வாங்கி வீடியோவை அழித்துள்ளார். அந்த மாணவனை மிரட்டி அனுப்பி வைத்துள்ளார்.

ஆனால் மாணவன் தலைமை ஆசிரியர் பார்ப்பதற்கு முன்பே வீடியோவை பள்ளி தோழர்களுக்கு பகர்ந்துள்ளான். இந்நிலையில் இந்த வீடியோ நேற்று ஒரேநாளில் வைரலானது. வீடியோவை அழிப்பதற்கு முன்பே அந்த மாணவன் நண்பர்களுக்கு அனுப்பிவிட்ட விவரம் அதன்பின்னரே அந்த தலைமை ஆசிரியருக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர், அந்த மாணவனை அழைத்து மீண்டும் மிரட்டியுள்ளார். இதனை மாணவனின் பெற்றோர் கேட்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து சிலகுலபொடி காவல் நிலையத்தில் மாணவனின் பெற்றோர் புகார் அளித்தனர். எனவே காவல்துறையினர் கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்து விசாரணையை தொடங்கினர். இதையடுத்து தலைமை ஆசிரியர் ஆனந்த்பிரசாத்தை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் தலைமை ஆசிரியரின் செயல் குறித்து கிருஷ்ணா மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளும் விசாரித்து, ஆனந்த்பிரசாத்தை பணியிடை நீக்கம் செய்து துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகளுக்கு பரிந்துரைத்தனர். அந்த ஆசிரியை மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.