13 வயது சிறுவன்.. சிறுவனின் ஆசிரியை.. தோஷம் என்ற பெயரில் நடந்த கொடுமை.. பரபரப்பு சம்பவம்..Teacher married 13 years old student in Punjab

திருமண தோஷம் என்ற பெயரில் ஆசிரியை ஒருவர் 13 வயது மாணவனை திருமணம் செய்த சம்பவம் நடந்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்த பெண் ஒருவர் மாணவர்களுக்கு மாலை நேரங்களில் வகுப்பு எடுத்து வந்துள்ளார். இந்நிலையியல் அவருக்கு நீண்ட வருடங்களாக திருமணம் ஆகாமல் இருந்ததால், சிறுவன் ஒருவரை திருமணம் செய்து, பின்னர் விதவை கோலம் எடுத்தால் அவருக்கு விரைவில் திருமணம் முடியும் என ஜோசியர் ஒருவர் கூறியுள்ளார்.

இதனை நம்பிய அந்த பெண், தன்னிடம் டியூசன் படிக்க வந்த 13 வயது சிறுவன் ஒருவரை திருமணம் செய்து, ஒருவாரம் அந்த சிறுவனை தனது வீட்டில் தங்கவைத்துள்ளார். இந்த தகவல் சிறுவனின் பெற்றோருக்கு தெரியந்ததை அடுத்து, அவர்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

சிறுவனின் பெற்றோர் அளித்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், இருதரப்பினரும் பேசி சமரசம் செய்து கொண்டனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.