இந்தியா

உத்திரபிரதேசத்துக்கு செல்லவேண்டிய சிறப்பு ரயில், ஒடிசாவுக்குச் சென்றதால் குழப்பத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்!

Summary:

special train wrongly reached

உலகத்தையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில், மார்ச் மாத இறுதியில் நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு பல கட்டங்களாக நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் விமானம், ரயில், பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் நிறுத்தப்பட்டன.

இந்தநிலையில், நாடு முழுவதும் தொழிற்சாலைகள், கட்டுமான தளங்கள் உள்ளிட்ட இடங்களில் பணிபுரியும் கோடிக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உணவு, தங்குமிடம் மற்றும் வருமானம் இல்லாமல் தவித்தனர். இதனால் பரிதவித்து நின்ற லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் கிராமத்திற்கு தண்டவாளம் வழியாகவும், சாலை வழியாகவும் சென்றனர். பல நூறு கிலோமீட்டர்க நடந்து சென்றது மற்றும் விபத்துக்களில் நுற்றுக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இதனை கருத்தில் கொண்ட மத்திய அரசு புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் கிராமத்திற்கு செல்வதற்காக சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை மகாராஷ்டிரா மாநிலம் வசாய் ரயில் நிலையத்திலிருந்து, உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூர் செல்ல வேண்டிய ரயில் புறப்பட்டது. முற்றிலும் வேறு திசையில் பயணித்த ரயில் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவுக்கு வந்து சேர்ந்துள்ளது.

உத்தரப்பிரதேசம் செல்ல வேண்டிய தொழிலாளர்கள், ரயிலில் ஒடிசாவுக்கு வந்த நிலையில், இது தொடர்பாக ரயில் நிலைய அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். எனினும், அந்த ரெயில் ரூர்கேலா செல்ல வேண்டியதுதான் என்று அதிகாரிகள் குழப்பமான பதிலை அளித்துள்ளனர். இதனால் உத்தரப்பிரதேசம் செல்ல வேண்டிய தொழிலாளர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.


Advertisement