இந்தியா உலகம்

வீடியோ: கருப்பு நிற ராட்சத பாம்பின் நடுநடுங்க வைக்கும் காட்சி!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..

Summary:

கருப்பு நிற ராட்சத பாம்பின் நடுநடுங்க வைக்கும் காட்சி! இணையத்தில் வைரலாகும் வீடியோ...

தாய்லாந்தில் ராட்சத பாம்பு ஒன்று பெரிய  சுவற்றின் மேலே அசால்ட்டாக ஏறும் வீடியோ காட்சி  ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி  வருகிறது.

பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். அதற்கு காரணம் பாம்பின் கொடிய விஷமும், அது கடித்தால் உயிரே போய்விடும் என்கிற பயமும்தான் காரணம். எவ்வளவு பெரிய வீராதி வீரனாக இருந்தாலும், பாம்பை பார்த்தால் ஒரு அடி பின் வாங்கத்தான் செய்வார்கள். ஆனால் ஒருசிலரே பாம்புடன் விளையாடுவது போன்ற வினோத சம்பவங்களில் ஈடுபடுவதை நாம் பார்த்திருப்போம்.

மேலும் பாம்புகள் குறித்த வீடியோக்களும் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த  குறிப்பிட்ட வீடியோவில், தாய்லாந்தில் ராட்சத பாம்பு ஒன்று செடிகள் வழியாக ஒரு இரும்பு கம்பியை பிடித்துக் கொண்டு பெரிய சுவற்றில் ஏறுகிறது. ஒரு புறத்தில் இருந்து இன்னொரு புறம் ஏறும்  போது அதை ஒரு பூனை கவனிக்கிறது. ஆனால் இந்த பாம்பை பார்த்து அந்த பூனை பயந்து ஓடாமல் அந்த  பாம்பை எட்டி எட்டி பார்க்கிறது.

58 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி  வருகிறது. அதுவும் இவ்வளவு பெரிய பாம்பு பெரிய சுவற்றில் ஏறும் என என்னால் நம்ப முடியவில்லை என வீடியோவை பதிவிட்டவர் தெரிவித்துள்ளார்.


Advertisement