ஒரு பாம்பின் செயலால் ஏழரை கோடி ரூபாய் வீட்டை சாம்பலாக்கிய நபர்! வெளியான அதிர்ச்சி காரணம்!

ஒரு பாம்பின் செயலால் ஏழரை கோடி ரூபாய் வீட்டை சாம்பலாக்கிய நபர்! வெளியான அதிர்ச்சி காரணம்!


snake-fire-house

பாம்புகள் என்றாலே பெரும் படையும் அஞ்சும் என்பர். ஆனால் சிலரோ பாம்புடன் விளையாடுவதும், உணவு வைப்பதும், மேலும் விஷத்தன்மை வாய்ந்த பாம்புகளை வளர்ப்பது, அதனைப் பிடிப்பது போன்ற வித்தியாசமான செயல்களால் மக்களை ஆச்சரியப்பட வைக்கின்றனர். 

பல விலங்கினங்கள் உணவு தண்ணீர் இன்றி மக்களிடம் சென்று சாப்பிடும் அவலநிலை இன்றைய காலகட்டத்தில் ஏற்பட்டு வருகிறது. மேலும் பாம்புகள் குறித்த ஆச்சரியப்பட வைக்கும் மற்றும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் பல வீடியோக்களும் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் ஒரு பாம்பு ஒன்றின் செயலால்  ஏழரை கோடி மதிப்புள்ள வீட்டை இழந்த நபரின் சம்பவம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி  வருகிறது.

அமெரிக்காவின் மேரிலாந்தில் வசிக்கும் நபர் ஒருவரின் வீட்டில் அடிக்கடி பாம்பு ஒன்றின் நடமாட்டம் அதிகமாக இருந்து வந்துள்ளது. அந்த பாம்பின் நடமாட்டத்தை  அறிந்த அந்த நபர் அந்த பாம்பை கொல்ல முயற்றுள்ளார்.

ஒரு நாள் இரவு 10 மணியளவில் அவரது வீட்டில் பாம்பை கண்ட அந்த நபர், அருகில் இருந்த குமிட்டி அடுப்பை தூக்கி வீசி இருக்கிறார். ஆனால் பாம்பு அந்த அடுப்பில் படாமல் தப்பி சென்றுள்ளது. ஆனால் அவர் வீசிய அடுப்பினால் வீடு முழுவதும் தீயாய் பரவ தொடங்கியுள்ளது. உடனடியாக அந்த நபர்  தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தார். பின்னர் 75 தீயணைப்பு படையினரின் வாகனங்கள் உடனடியாக வந்து தீயணைப்பு பணிகளை மேற்கொண்டாலும், வீடு எரிந்து சாம்பலானது. 

இந்த சம்பவத்தில் எரிந்த வீட்டின் விலை மதிப்பு மட்டுமே ஏழரை கோடி ரூபாயாம். தீப்பிடித்த வீட்டின் புகைப்படங்கள்  மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.