
snake byte
மும்பை தாராவியில் உள்ள பால்கிபூர் என்ற பகுதியில் சுல்தானாகான் என்ற பெண் அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது வீட்டின் அருகே பாம்புகள் தொல்லை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று அவரது வீட்டிற்குள் பாம்பு புகுந்துள்ளது.
இந்நிலையில் சுல்தானாகான் தனது வீட்டில் குடும்பத்துடன் டிபன் சாப்பிட்டு கொண்டிருந்துள்ளார். அப்போது சுல்தானாகானின் மகளை பாம்பு கொத்தியுள்ளது. ஆனால் தன்னை எதோ கடித்துவிட்டதாக அம்மாவிடம் கூறியுள்ளார். அப்போது வீட்டில் பாம்பு ஒன்று வந்துள்ளது.
இதனையடுத்து தன் மகளை பாம்பு தான் கடித்தது என்பதை தெரிந்துகொண்ட சுல்தானாகான் பதற்றமடையாமல், தன் மகளை கடித்த பாம்பை, தைரியமாக தன் கையால் பிடித்துள்ளார். அப்போது அவருடைய கைவிரலிலும் பாம்பு கொத்தியுள்ளது.
ஆனாலும் அந்த பாம்பை விடாமல் தைரியமாக கையில் பிடித்து, தன் மகளுடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் சுல்தானா. தங்களை கடித்த பாம்பு எந்த வகையைச் சேர்ந்தது என்பதை மருத்துவர்கள் அறிந்தால், சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக இருக்கும் என்பதால் பாம்பையும் கையோடு மருத்துவமனைக்கு அழைத்து வந்ததாக சுல்தானாகான் கூறியுள்ளார். அவரின் தைரியத்தை அனைவரும் பாராட்டியுள்ளனர். இதனையடுத்து இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement