இந்தியா விளையாட்டு

வெறுப்பேற்றிய இங்கிலாந்து ரசிகர்கள்.! தனது விரல்களால் பதிலடி கொடுத்த சிராஜ்.! வைரல் வீடியோ.!

Summary:

இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து ரசிகர்களுக்கு இந்திய வீர

இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து ரசிகர்களுக்கு இந்திய வீரர் சிராஜ் கொடுத்த பதிலடி வீடியோ தற்போது இந்திய ரசிகர்களால் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 151 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்நிலையில் லீட்ஸ் மைதானத்தில் 3-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. லார்ட்சில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி தோற்றதால், கடும் விமர்சனத்திற்குள்ளானது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலே நேற்று இங்கிலாந்து அணி கடும் ஆக்ரோசத்துடன் விளையாடியது. இங்கிலாந்து ரசிகர்களும் மைதானத்திற்கு வெளியில் ஆக்ரோஷமாக இங்கிலாந்து அணிக்கு ஆதரவு அளித்து வந்தனர்.

இந்தகினைளையில், இந்திய அணியின் பந்துவீச்சாளர் மொகமது சிராஜ் பவுண்டரி எல்லையில் பீல்டிங் செய்து கொண்டிருந்த போது, மைதானத்தில் இருந்த இங்கிலாந்து ரசிகர்கள் அவரை வெறுப்பேற்றும் வகையில்,எங்கள் அணியின் ஸ்கோரைப் பாரு என்று செய்கை செய்தனர். இதனைப்பார்த்த முகமது சிராஜ் தன்னுடைய விரல்கள் மூலம் நங்கள் ஒன்று நீங்கள் ஜீரோ என்று தொடரை 1-0 என்று பதிலடி கொடுத்தார். இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement