இந்தியா

தயவுசெய்து நிறுத்துங்கள்! மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக பொங்கியெழுந்து நடிகர் சித்தார்த் வெளியிட்ட பதிவு!

Summary:

siddharth tweet against attacking delhi students

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு எதிராக அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில், பெரும் போராட்டம் வெடித்துள்ளது.

மேலும் டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி பேரணியாக புறப்பட்டனர். அப்பொழுது போலீசார் தடியடி நடத்தியதால் போராட்டம் வெடித்தது. மேலும் சாலைகளில் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. இரு பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டது. மேலும் 50 மாணவர்கள் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். மேலும் போலீசார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து வகுப்பறையை சேதப்படுத்தி விட்டதாகவும் மாணவர்களால் குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில் டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக மத்திய அரசை விமர்சித்து  நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சித்தார்த், அவர்கள் இருவரும் கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனன் அல்ல, சகுனி மற்றும் துரியோதனன். பல்கலைக்கழகங்களைத் தாக்குவதை நிறுத்துங்கள். மாணவர்களைத் தாக்குவதை நிறுத்துங்கள் என பதிவிட்டுள்ளார்.


Advertisement