"சாமியாரும், 6 லேடி கேடிகளும்" கரண்டு ஷாக் கொடுத்து பெண் பலாத்காரம்.. 15 ஆண்டுகளாக திடுக் சம்பவம்.!



Shocking Crime: Self-Proclaimed Godman and Followers Arrested for Sexual Abuse

சாமியாரின் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணுக்கு கரண்ட் ஷாக் கொடுத்து பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

20 ஆண்டுகால பக்தர்கள்:

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே, கராதி பகுதியில் நவீன குருகுலம் என்ற பெயரில் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆசிரமத்தை ராதாமோகன் மிஸ்ரா என்ற நபர் நடத்தி வருகிறார். இவர் தன்னைத்தானே சாமியார் என கூறிக்கொண்டு சுற்றி வந்துள்ளார். இவரிடம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் பக்தர்களாக இருந்து வந்துள்ளனர்.

இதையும் படிங்க: கடன் கேட்டு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. பாஜக பிரமுகரின் கொடூர செயல்..!

தனிமைப்படுத்தினார்:

ராதாமோகன் மனிதர்களின் மனதில் இருக்கும் எண்ணங்களை தெரிந்துகொள்ளும் ஆற்றல் தன்னிடம் இருப்பதாகவும் கூறி வந்துள்ளார். பக்தர்களின் தனிப்பட்ட வாழ்க்கை விபரங்களை அவர்களிடமே எழுதி வாங்கி, பின் அதனை வைத்தே அவர்களை மூளைச்சலவை செய்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார். இப்படியாக அந்த குடும்பத்தில் இருந்த ஒரு பெண்ணை குடும்பத்திடம் இருந்து பிரித்து தனிமைப்படுத்தி இருக்கிறார்.

Crime news

சாமியாரும் கேடிகளும்:

இப்படியாக அந்த பெண்ணை கடந்த 15 ஆண்டுகளாக சித்ரவதை செய்து பாலியல் வன்கொடுமை செய்து வந்த ராதாமோகன், சாமியாரின் பலவந்தப்படுத்தலுக்கு பெண் இணங்க மறுத்தால் பெண்ணுக்கு மின்சார ஷாக் கொடுத்ததும் கட்டாயப்படுத்தி இருக்கிறார். மேலும், சாமியாரின் சிறுநீரை குடிக்க கட்டாயப்படுத்தி இருக்கிறார். இந்த குற்றச்செயலுக்கு சாமியாருடன் ஆசிரமத்தில் இருந்த 6 பெண்களும் உதவி இருக்கின்றனர். பெண்ணின் சொத்துக்களையும் மாற்ற முயற்சித்துள்ளார்.

அதிரடி கைது:

இந்த கொடூரத்தால் பாதிக்கப்பட்ட பெண்மணி ஒருகட்டத்தில் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, புகாரை ஏற்ற காவல்துறையினர் ராதாமோகன் மிஸ்ரா உட்பட 8 பேரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

இதையும் படிங்க: கைராசிக்கார டாக்டர் செய்யிற வேலையா இது? அலறியபடி கணவரிடம் ஓடிவந்த 19 வயது பெண்.. ஆஸ்பத்திரிக்குள் திக்., திக்.!