இந்தியா

பெட்ரோல்பங்க் உரிமையாளரின் அறைக்குள் பாம்பை வீசிய மர்மநபர்..! என்ன காரணம் தெரியுமா..? வைரலாகும் சிசிடிவி காட்சி இதோ.!

Summary:

Shocking CCTV Footage Shows Maharashtra Man Releasing Snake At Petrol Pump

மத்தியபிரதேச மாநிலம் மும்பையில் எரிபொருள் தரமறுத்த பெட்ரோல் பங்கின் அலுவலகத்துக்குள் மர்மநபர் ஒருவர் பாம்பை வீசி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் முகக்கவசம் அணியவேண்டும், சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும் என பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்பட்டுவருகிறது. அதேநேரம் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி வாகனங்கள் அல்லாது கேன்களில் பெட்ரோல் அல்லது டீசல் வழங்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மும்பையில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் நபர் ஒருவர் கேனில் எரிபொருள் நிரப்புமாறு கேட்டுள்ளார். ஆனால் பங்க் ஊழியர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் தனது கையில் இருந்த ஜாடியை திறந்து அதில் இருந்த பாம்பை பெட்ரோல் பங்கின் அலுவலகத்துக்குள் விட்டுச்சென்றுள்ளார்.

இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவானநிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மநபரை தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது.


Advertisement