இந்தியா

இப்படிப்பட்ட கணவர் கிடைத்தும் விவாகரத்து கேட்கும் பெண்! நீதிமன்றத்தில் பெண் கூறிய அதிர்ச்சி காரணம்! காலம் மாறிப்போச்சு...

Summary:

shock reason for divorce in up

நாடு முழுவதும் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவாகரத்து வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படுகின்றன. வரதட்சனை கொடுமை, கணவன் துன்புறத்தல், சதேகம் உள்ளிட்ட காரணங்களால் விவாகரத்து நடைபெற்றிருப்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் உத்தரபிரதேசத்தில் பெண் ஒருவர் நீதிமன்றத்தில் விவாகரத்துக்காக கூறிய காரணம் அதிர்ச்சியடையவைத்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், அங்குள்ள நீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன்பு விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தன் கணவர் திருமணமான 18 மாதங்களாக ஒரு சண்டை கூட போடவில்லை, ஒவர் லவ்வாக இருப்பதால் விவாகரத்து கோரியுள்ளார். மேலும் சமைப்பதற்கு, வீட்டு வேலைக்கு கூட அவர் உதவி செய்வதால் எனக்கு பிடிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

அவர்காட்டும் அதிக அன்பு என்னை திணறடிக்கிறது. எல்லா விஷயங்களிலும் ஒத்துப்போகும் கணவன் எனக்கு தேவையில்லை. எனவே, எனக்கு அவரிடமிருந்து விவாகரத்து வேண்டும் என கோரியிருந்தார். இதைப் பரிசீலித்த நீதிபதி, அந்த பெண்ணின் காரணம் சரியாக இல்லை எனக் கூறி நீதிமன்ற அவரது மனுவை நிராகரித்துள்ளார். ஆனாலும் அந்தப் பெண், தனது கிராமப் பஞ்சாயத்தாரிடம் இந்த விவாகரத்தை எடுத்துச் சென்றார். ஆனால், அவர்களும் இதை நிராகரித்துள்ளனர்.

இதுகுறித்து அவரது கணவர் கூறுகையில், எனது மனைவியை மிகவும் நேசிக்கிறேன். அவர் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை. எனவே எங்களுக்கு விவாகரத்து வழங்க வேண்டாம் என கூறியுள்ளார்.


Advertisement