உத்திரபிரதேசத்தில் பரபரப்பு சம்பவம்... மாணவிக்கு லவ் லெட்டர் கொடுத்த ஆசிரியர்.. அதிர்ச்சியில் பெற்றோர்..!



sensational-incident-in-uttar-pradesh-the-teacher-gave

உத்திர பிரதேச மாநிலம் கன்ணௌவ்ஜ் பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவருக்கு அந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் காதல் கடிதம் எழுதிக் கொடுத்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறி இருப்பதாவது “நான் உன்னை மிகவும் காதலிக்கிறேன் என்றும் உன்னிடம் அதிகமாக பேச ஆசைப்படுகிறேன் என்றும் மேலும் பள்ளி விடுமுறை நாட்களில் உன்னை மிகவும் மிஸ் பண்ணுகிறேன் என்றும் எழுதியுள்ளது.

Uttar pradesh

மேலும் அந்த கடிதத்தில் உன்னிடம் நான் அதிக நேரம் செலவழித்து பேச வேண்டும் என்றும் நீ அனைவரும் பள்ளிக்கு வருவதற்கு முன் சீக்கிரமாக வந்தால் இருவரும் பேசி புரிந்து கொள்ளலாம்" என்றும் எழுதப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த கடிதத்தைப் படித்து அதிர்ச்சடைந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதனைக்  கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் பெற்றோர் அளித்த புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் தலைமறைவாகியுள்ள ஆசிரியரை தேடி வருகின்றனர்.