
Schools are leave due to corono virus
சீனாவில் துவங்கி இன்று உலகின் பல்வேறு நாடுகளில் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இதன் தாக்கம் தற்போது இந்தியாவிலும் எதிரொலிக்க துவங்கியுள்ளது.
இந்தியாவில் மட்டும் இதுவரை 44 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் பெங்களூருவை சேர்ந்த 40 வயது மென்பொருளாரும் ஆவார். இவர் சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து பெங்களூரு வந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் மேலும் பரவுவதை தடுக்க மாநில அரசுகள் ஒரு சில நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பெங்களூரில் இன்று திங்கட்கிழமை அனைத்து LKG மற்றும் UKG பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டது.
இந்நிலையில் நாளை செவ்வாய்கிழமை முதல் பெங்களூருவில் 5 ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை விடுவதாக அம்மாநில மருத்துவ கல்வி அமைச்சர் சுதாகர் அறிவித்துள்ளார்.
Advertisement
Advertisement