சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு உற்சாக செய்தி: அயலான் படத்தின் இசை வெளியீடு விழா அறிவிப்பு.!
42-உடன் சுற்றுலா வந்த 26-ஐ தாக்கிய கேரளத்து சேட்டன்ஸ்.. மறந்துட்டேன், மன்னிச்சிட்டேன் - ரஷிய ஜோடி.!
42-உடன் சுற்றுலா வந்த 26-ஐ தாக்கிய கேரளத்து சேட்டன்ஸ்.. மறந்துட்டேன், மன்னிச்சிட்டேன் - ரஷிய ஜோடி.!

கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சிக்கு, வெளிநாடுகளை சார்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவது வழக்கம். இந்நிலையில், ரஷிய நாட்டினை சேர்ந்த டேனியல் (வயது 42) என்பவர், அவரின் பெண் தோழியான கேத் (வயது 26) என்பவனுடன் கொல்லத்திற்கு சுற்றுலா வந்துள்ளார்.
இவர்கள் இருவரும் படகு துறையில் சுற்றிப்பார்த்துக்கொண்டு இருந்த நிலையில், இவர்களுடன் டெல்லியை சேர்ந்த ஜோடியும் இருந்துள்ளனர். அப்போது, அங்கு வந்த கும்பலொன்று ரஷிய ஜோடியை தாக்கி மிரட்டியுள்ளது. அங்குள்ள பொதுமக்கள் இளைஞர்களை கண்டிக்கவே, அவர்களையும் அடிக்க பாய்ந்துள்ளனர்.
இதனால் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் வருவதால் கும்பல் தப்பி சென்றுள்ளது. நிகழ்விடத்தில் இருந்த சி.சி.டி.வி கேமிராவை கண்காணித்த அதிகாரிகள், ரஷிய ஜோடியை தாக்கிய 3 பேரை கைது செய்தனர். மேலும், அவர்கள் மதுபோதையில் இருந்ததும் உறுதியானது.
இந்த விஷயம் தொடர்பாக ரஷிய ஜோடி தெரிவிக்கையில், "இந்தியாவுக்கு நான் முன்னதாகவே வந்துள்ளேன். ஆனால், கேரளாவுக்கு தற்போது தான் முதல் முறையாக வந்துள்ளேன். இங்குள்ள சுற்றுலா தளங்கள் மனதை மயக்குகிறது. உணவுகள் சுவையாக உள்ளது. எங்களுக்கு நடந்த நிகழ்வை நான் மறந்துவிட்டேன். எங்களை தாக்கியவர்களை மணித்துவிட்டேன். வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் மீண்டும் கேரளாவுக்கு வருவேன்" என்று தெரிவித்தார்.