முன்னாள் காதலனுக்கு Ex தோழி அனுப்பிய பரிசு; கலாய்ப்பதில் சந்தானத்தை மிஞ்சிய வேற லெவல் சம்பவம்.! விபரம் உள்ளே.!

காதல் என்ற வார்த்தையை கேட்காத மனிதனே கிடையாது என உலகில் கூறிவிடலாம். தனது மனம் கவர்ந்த நபரின் மீது காதல் வயப்படும் தம்பதிகளில் சேருவோரும் - பிரிவோரும் ஏராளம்.
ஆனால், காதல் வெவ்வேறு கோணங்களில் எப்போதும் தொடர்ந்துகொண்டே இருக்கும். காதல் வயப்பட்ட ஜோடிகள், தங்களின் நினைவாக அவ்வப்போது பரிசுகள் வழங்கிக்கொள்பவை.
இந்நிலையில், ட்விட்டரில் நமன் என்பவர் பதிவு செய்துள்ள விஷயம் வைரலாகி இருக்கிறது. அவருடன் தங்கி இருக்கும் நபருக்கு, அவரது பெண் தோழி அனுப்பி வைத்த பரிசு பலரையும் வியக்க வைத்துள்ளது.
அதாவது, காதல் பிரிவால் இருவரும் பிரிந்ததாக தெரியவரும் நிலையில், தனது முன்னாள் காதலனுக்காக குப்பை போடும் பிளாஸ்டிக் பேப்பரை பார்சலாக அனுப்பி வைத்து இருக்கிறார். இந்த சம்பவம் தற்போது நெட்டிசன்களிடையே சிக்கி கலாய்க்கப்பட்டு வருகிறது.
my roommate's ex sent this to him and I can't stop laughing 😭 pic.twitter.com/MUs60dvm2T
— Naman (@yourtwtbro) July 18, 2023