வேட்டையன் படம் ஓடிய திரையரங்கில் காலாவதியான பாப்கார்ன்; ரஜினி ரசிகர்கள் ஆவேசம்.!
கால்நடைகளால் அதிகரிக்கும் சாலை விபத்து... கடந்த ஐந்து வருடங்களில் 900-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு-அரியானா..!
கடந்த ஐந்து வருடங்களில் அரியானா மாநிலத்தில் கால்நடைகளால் 3,383 சாலை விபத்துகள் நடந்துள்ளது.
அரியானா மாநிலத்தில் கடந்த ஐந்து வருடங்களில் கால்நடைகளால் ஏற்பட்ட சாலை விபத்துகளில் 900-க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருப்பதாக அந்த மாநில அரசு சட்டசபையில் தெரிவித்துள்ளது. கடந்த ஐந்து வருடங்களில் அரியானா மாநிலத்தில் கால்நடைகளால் மொத்தம் 3,383 சாலை விபத்துகள் நடந்திருப்மதாக வேளாண்மை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் ஜே.பி. தலால் சட்டசபையில் தெரிவித்திருக்கிறார்.
சட்டமன்ற கூட்டத்தொடரின் போது சுயேச்சை எம்எல்ஏ பால்ராஜ் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஜே.பி. தலால், இந்த விபத்துகளில் 919 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் மூவாயிரத்து 17 பேர் காயம் அடைந்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் தெருக்களில் சுற்றித் திரியும் தெருக் கால்நடைகளின் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு அரசின் பரிசீலனையில் முன்மொழிவு இருக்கிறதா என பால்ராஜ் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மந்திரி தலால், 2020-21 மற்றும் 2021-22 ஆம் வருடங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விலங்குகளுக்கு பல்வேறு தங்குமிடங்களில் மறுவாழ்வு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும் இந்த விலங்கு நல காப்பகங்களுக்கு அரசு நிதியுதவி வழங்கி வருகிறது என தெரிவித்துள்ளார்.