இந்தியா

2019-20 ஆம் ஆண்டுகளில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படவில்லை.. ரிசர்வ் வங்கி.

Summary:

RBI-did-not-print-even-one-Rs-2000-note-in-201920

புதிய 2000 ரூபாய் நோட்டு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதாவது 2019-20 ஆண்டுகளில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் எதுவும் அச்சடிக்கப்படவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதே சமயம்  27,398 ரூபாய் நோட்டுகளை மட்டும் புழக்கத்தில் விட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் 500 ரூபாய் நோட்டை பொருத்தவரை 1,463 கோடி நோட்டுகளை அச்சிட ஆர்டர் வழங்கப்பட்ட நிலையில் இதுவரை 1200 கோடி நோட்டுகளை மட்டும் அச்சிட்டு  விநியோகிக்கப்பட்டுள்ளன.

மேலும்100 ரூபாய் நோட்டை பொருத்தவரை 330 கோடியும் 200 ரூபாய் நோட்டை பொருத்தவரை 205 கோடி நோட்டுகளும் அச்சிடப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி இந்த ஆண்டில் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்திருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துளளது.


Advertisement