13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
தவறான வங்கிக்கணக்குக்கு பணம் அனுப்பிவிட்டீர்களா.. பணத்தை மீட்க இதை செய்யுங்கள் - RBI அறிவிப்பு.!
வாடிக்கையாளர்கள் தவறுதலாக மற்றொரு வங்கிக்கணக்கு பணம் அனுப்பிவிட்டால், அப்பணத்தை மீட்க வங்கியை நாடலாம். அல்லது தங்களிடம் இணையவழியில் புகார் அளிக்கலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வங்கி பணப் பரிவர்த்தனைகள் அனைத்தும் இணையதளத்திற்கு மாற்றப்பட்ட பின்னர், பல்வேறு குழப்படிகள் நடைபெறுகிறது. சில நேரங்களில் தவறான வங்கி கணக்குக்கு பணம் அனுப்பும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த பணத்தை மீண்டும் பெற அவர்கள் வங்கிகளுக்கு அலைந்து வருகின்றனர். இந்நிலையில், தவறான வங்கி கணக்குக்கு பணம் அனுப்பினால் 48 மணி நேரத்திற்குள் அந்த பணத்தை வங்கி வாடிக்கையாளருக்கு மீட்டு தர வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட வங்கி பணத்தை மீண்டும் பெற்று தராத பட்சத்தில், ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என்றும், புகார் அளிக்கும்போது பரிவர்த்தனை குறியீட்டு எண் உட்பட முக்கிய விவரங்கள் கேட்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
RBI-க்கு இணையவழியில் புகார் அளிக்க: bankingombudsman.rbi.org.in