8 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன கணவர்! மறுமணம் செய்த மனைவி! திடீரென வெளியான உண்மை.
புது டெல்லியை சேர்ந்தவர் ஜெய் பகவான். இவரின் மகன் ரவிக்கும், சகுந்தலா என்ற பெண்ணுக்கும் கடந்த 2011 ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன சில நாட்களிலேயே ரவி காணாமல் போயுள்ளார்.அவரது தந்தை போலீசில் புகார் கொடுத்தும் மகனை கண்டு பிடிக்க முடியவில்லை.
இதற்கிடையில் சகுந்தலா கமல் என்பவரை மறுமணம் செய்து கொண்டார். ஆனால் மிகுந்த வேதனையுடன் இருந்த ஜெய் தனது மகன் குறித்து தகவல் அறிய உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். அதன் மூலம் தீவிர விசாரனையில் ஈடுபட்டனர் குற்றப்பிரிவு அதிகாரிகள்.
அவர்கள் நடத்திய விசாரனையில் தான் தெரியவந்துள்ளது ரவியை சகுந்தலா விருப்பமின்றி திருமணம் செய்துள்ளார் என்று. அதிலும் ரவி தனது மனைவியை தனது சகோதரியின் வீட்டிற்கு திருமணமான ஒரு வாரம் கழித்து அழைத்து சென்ற போது தான் காணாமல் போயுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
இதனால் அதிகாரிகளுக்கு அதிக சந்தேகம் ரவியின் மனைவி மீது ஏற்பட்டுள்ளது. அதன் படி தீவிர விசாரனையில் ஈடுபட்ட போது பல திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது ரவியின் மனைவி திருமணத்திற்கு முன்பே கமல் என்பவரை காதலித்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி ரவி காணாமல் போனதாக சொல்லப்படும் நாளில் சகுந்தலா, ரவி மற்றும் காதலன் கமல் மூவரும் ஒன்றாக காரில் சென்றுள்ளனர்.
அப்போது கமல் கயிற்றால் ரவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அவரைப் புதைத்துள்ளனர். மேலும் அதிகாரிகள் அந்த இடத்தை சோதனை செய்த போது 8 ஆண்டுகள் ஆனதால் அதில் வெறும் எழும்புகள் மட்டும் நொறுங்கி கிடந்துள்ளது.
மேலும் அதிகாரிகள் கமல் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த கணேஷ் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவான சகுந்தலாவை தேடி வருகின்றனர்.