தனது வழக்கமான ஸ்டைலில் இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்!

தனது வழக்கமான ஸ்டைலில் இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்!


Rajini wishes indian army

பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய போர் விமானப்படை இன்று அதிகாலை தாக்குதல் நடத்தி இருக்கிறது. இதில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 3.30 அளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குல் நடத்தி இருக்கிறது. இந்திய விமான படைக்கு சொந்தமான மிராஜ் 2000 ரக போர் விமானம் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

rajinikanth

பாகிஸ்தானின் முசாபராபாத் பகுதிக்குள் புகுந்த இந்தியா ராணுவத்தின் போர்ப்படை விமானம் இந்த அதிரடி தாக்குதலை நடத்தி இருக்கிறது. இந்த தாக்குதலில் அங்கு இருந்த இரண்டுக்கும் மேற்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டது.

இந்திய ராணுவத்தின் இந்த அதிரடி தாக்குதலுக்கு நாடு முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 

rajinikanth

இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கே உரித்தான ஸ்டைலில் ஒற்றை வாக்கியத்தில், "BRAVO INDIA" என தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.