அவர்களின் சாபம் சும்மா விடாது... இலங்கை பற்றி அப்போதே கூறிய ரஜினிகாந்த்.! வைரல் வீடியோ

அவர்களின் சாபம் சும்மா விடாது... இலங்கை பற்றி அப்போதே கூறிய ரஜினிகாந்த்.! வைரல் வீடியோ



rajini-talk-about-srilanka

கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இலங்கையில் கடும் வன்முறை வெடித்தது.  பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக மகிந்த ராஜபக்சே அறிவித்த சில மணி நேரங்களில், ராஜபக்சே ஆதரவரவாளர்களுக்கும் அரசுக்கு எதிராக போராடுபவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. ராஜபக்சேவின் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர்.

இந்த நிலையில், இலங்கை குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. கடந்த 2008ஆம் ஆண்டு இலங்கையில் யுத்தம் நடந்தபோது, தமிழகத்தில் நடிகர் சங்கம் சார்பில் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.


அதில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் பேசியபோது, இலங்கை மட்டுமல்ல, எந்த நாடாக இருந்தாலும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் ஏழை மக்கள் வேதனைபட்டால் அந்த நாடு உருப்படாது. இலங்கையில் பெண்களின் உதிரம் கொட்டுகிறது. அங்கு சாகும் மக்களின் பிணங்கள் புதைக்கப்படவில்லை, விதைக்கப்படுகிறது. நீங்கள் யுத்தத்தில் எல்லாரையும் அழித்தாலும், அந்த விதை நாளை வந்து உங்களை நிம்மதியாக வாழ விடாது என ஆவேசமாக பேசினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.