இந்தியா

வாவ் செம்ம மாஸ்! காட்டில் சாகசம் செய்த நடிகர் ரஜினி! வெளியான புதிய ப்ரோமோ!

Summary:

Rajini into wild

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அனைவராலும் சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் இதுவரை 160க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு என்று உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் இவர் நடிப்பை தாண்டி புதிதாக அரசியலில் கலம் இறங்கியுள்ளார். மேலும் வருகின்ற தேர்தலில் போட்டியிட உள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினி பியர் கிரில்ஸூடன் இணைந்து காட்டில் சாகசம் செய்த இன்டு தீ வைல்ட் என்ற நிகழ்ச்சியில் காட்டிற்கு சென்று புதிய முயற்சி ஒன்றை நிகழ்த்தினார். 

தற்போது இந்த நிகழ்ச்சியின் புதிய புரோமா வெளியிடப்பட்டுள்ளது. அதில் நடிகர் ரஜினி மலை ஏறுவது, ஸ்டைலாக வண்டி ஓட்டுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement