12 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம்.. மனைவி கண்முன் கணவன் வெறிச்செயல்.. பேரதிர்ச்சி சம்பவம்..!

12 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம்.. மனைவி கண்முன் கணவன் வெறிச்செயல்.. பேரதிர்ச்சி சம்பவம்..!


Rajasthan Jaipur 12 Aged boy Sexual Abused

வீட்டில் குழந்தை தொழிலாளராக வேலை பார்த்து வந்த சிறுவனை ஆணொருவர் பலாத்காரம் செய்த விவகாரத்தில், அவரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். கணவனுக்கு வலைவீசப்பட்டுள்ளது.

இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர், சாஸ்திரி நகர் பகுதியில் வசித்து வரும் தம்பதியின் வீட்டில், 12 வயது சிறுவன் குழந்தை தொழிலாளராக வேலை பார்த்து வருகிறான். சிறுவனை தம்பதி அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் தெரியவருகிறது. 

இந்நிலையில், சம்பவத்தன்று சிறுவனை அழைத்த கணவன், மனைவி கண்முன் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு எந்த விதமான கண்டனமும் தெரிவிக்காத மனைவியும், கணவனின் கொடூர செயலுக்கு உடந்தையாக இருந்துள்ளார். 

rajasthan

இதனால் பாதிக்கப்பட்ட சிறுவன் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த தகவலை அறிந்த பெண்ணின் கணவர் தப்பி சென்ற நிலையில், அவரை அதிகாரிகள் தேடி வருகின்றனர். 

மேலும், போக்ஸோ, குழந்தை தொழிலாளர் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குபதிந்த காவல் துறையினர் பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் அங்குள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவ அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.