இந்தியா

கர்ப்பிணி பெண் பிரசவத்தில் உயிரிழப்பு.. பெண் மருத்துவர் மீதான புகாரால் மனதுடைந்து தற்கொலை.!

Summary:

கர்ப்பிணி பெண் பிரசவத்தில் உயிரிழப்பு.. பெண் மருத்துவர் மீதான புகாரால் மனதுடைந்து தற்கொலை.!

மகப்பேறு சிகிச்சையில் பெண் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பெண் மருத்துவரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் அவர் தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.

இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தௌஷா நகரில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வருபவர் மருத்துவர் அர்ச்சனா. சம்பவத்தன்று மகப்பேறுக்காக அனுமதி செய்யப்பட்ட பெண்மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரியவருகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள், மருத்துவர் அர்ச்சனாவின் மீது குற்றம்சாட்டி அவரே பெண்ணின் மரணத்திற்கு காரணம் என்று தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இந்நிலையில், கர்ப்பிணி பெண்ணின் மரணத்திற்கு தான் காரணம் இல்லை என்று தெரிவித்த மருத்துவர் அர்ச்சனா, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் என்று கூறியும் உறவினர்கள் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. மேற்படி புகார் வழக்குப்பதிவு செய்யப்பட்டதால், மனதுடைந்து போன அர்ச்சனா தற்கொலை செய்துகொண்டார். 

இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், FORDA சங்கம் ராஜஸ்தான் மாநில முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில், பெண் மகப்பேறு சிகிச்சையில் உயிரிழந்தது தொடர்பாகவும், மருத்துவர் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டும். மருத்துவரின் மீதுள்ள வழக்கை இரத்து செய்து, அவரின் குடும்பத்தாருக்கு உடனடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.


Advertisement