பரபரப்பு வீடியோ: புடிங்க!! புடிங்க!! ரயிலில் சிக்கிய முதியவர்.. நொடியில் காப்பாற்றிய காவலர்..!! மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பாராட்டு..

பரபரப்பு வீடியோ: புடிங்க!! புடிங்க!! ரயிலில் சிக்கிய முதியவர்.. நொடியில் காப்பாற்றிய காவலர்..!! மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பாராட்டு..



Railway police saved old man from train accident viral video

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த முதியவர் ஒருவரை ரயில்வே காவலர் ஒருவர் காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம், சவாய் மதோபூர் ரயில்வே ஸ்டேஷனில் ரயில் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு பிளாட்பாரத்தில் இருந்து புறப்பட்டது. அப்போது ரயிலில் ஏற முயன்ற முதியவர் ஒருவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது ரயில்வே பிளாட்பாரத்தில் நடந்துசென்றுகொண்டிருந்த காவலர் ஒருவர், முதியவர் கீழே விழுவதை பார்த்ததும் அவரை காப்பாற்ற ஓடுகிறார்.

ஆனால் ரயிலில் தொங்கிக்கொண்ட சிறிதுதூரம் இழுத்துவரப்பட்ட அந்த முதியவர் ஒருகட்டத்தில் ரயிலுக்கும், பிளாட்பாரத்திற்கும் இடையே இருக்கும் சிறிய இடைவெளியில் விழுகிறார். அப்போது அந்த முதியவர் பின்னாலையே ஓடிவந்த அந்த ரயில்வே காவலர் உடனே அந்த முதியவரை அங்கிருந்து இழுத்து காப்பாற்றுகிறார்.

இதனால் அந்த முதியவர் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்தநிலையில், இந்தா காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் வைரலானது. வீடியோவை பார்த்த பலரும் முதியவரின் உயிரை காப்பாற்றிய காவலரை பாராட்டினர்.

இந்நிலையில் இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், அந்த காவலரை வெகுவாக பாராட்டியுள்ளார். இதுபோன்ற சவாலான நேரத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய காவலருக்கு உளமாற பாராட்டு தெரிவித்துக்கொள்வதாக அமைச்சர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதுபோன்ற காவலர்களை நினைத்து தாம் பெருமைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.