அடக்கொடுமையே.! காதல் செய்யும் இடமா இது!! ஷாக் புகைப்படத்துடன் வெளியான அதிரடி அறிவிப்பு!!

அடக்கொடுமையே.! காதல் செய்யும் இடமா இது!! ஷாக் புகைப்படத்துடன் வெளியான அதிரடி அறிவிப்பு!!


railway announcement to lovers

தற்போதைய காலகட்டத்தில் காதல் ஜோடிகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மேலும் மக்கள் அடிக்கடி சென்றுவரும் சுற்றுலாதலங்களான பார்க், பீச் போன்று  எங்கு சென்றாலும் காதலர்கள் ஜோடி ஜோடியாக அமர்ந்து தங்களது அத்துமீறல் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் குடும்பத்தார்கள் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை இது போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லும்போது முகம் சுளிக்க வேண்டிய நிலை  ஏற்படுகிறது.

lovers

அதுமட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் காதல் ஜோடிகளின் தொல்லை குறைந்தபாடில்லை. இந்நிலையில் தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் ஒன்றின் கீழே அமர்ந்து காதல் ஜோடி ஒன்று  ஜாலியாக பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.

 இந்நிலையில் ரயில்வே அமைச்சகம் இதுகுறித்து தங்களது டுவிட்டர் பக்கத்தில், இத்தகைய செயல் ஆபத்தானது மட்டுமல்லாமல் தண்டனை கொடுக்கக் கூடியதாகும். இதுபோல் இனிமேல் கீழே செல்லக்கூடாது. எச்சரிக்கை இன்றி சரக்கு ரயில் திடீரென இயக்கப்படும். கவனமாக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள் என பதிவிட்டுள்ளனர்.