மக்களின் பணத்தை அரசு கொள்ளையடிக்கிறது.. சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்து ராகுல் காந்தி குற்றசாட்டு..



Rahul gandhi twit about gas rate increased

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் கட்சியி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், "அனைவருக்குமான வளர்ச்சியே தாரக மந்திரம் எனக் கூறிக்கொண்டு, இருவரின் வளர்ச்சிக்கு மட்டுமே உதவும் வகையில் நாட்டு மக்களிடம் இருந்து அரசு கொள்ளையடிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முகேஷ் அம்பானி, கவுதம் அதானி ஆகிய இருவரின் நலனுக்காகவே புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்ததாக ராகுல்காந்தி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத் தக்கது.