மோடியின் வீடியோவை பதிவிட்டு கிண்டல் செய்த ராகுல் காந்தி!



rahul gandhi talk about modi

மத்திய பட்ஜெட்டை நேற்று முன்தினம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.  பட்ஜெட் தாக்கல் செய்த அன்று பங்குச்சந்தை பெரிய அளவில் சரிவை சந்தித்தது. 

இந்நிலையில் பிரதமரின் உடற்பயிற்சி வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பொருளாதாரத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 

பிரதமா் மோடி உடற்பயிற்சி செய்யும் பழைய விடியோவை வெளியிட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி, ‘உங்கள் மாயாஜால உடற்பயிற்சியை மீண்டும் சிலமுறை செய்ய முயற்சிக்கவும்; இதன் மூலம் பொருளாதாரம் மீண்டும் வலுப்படக்கூடும்’ என்று கேலியாக தெரிவித்துள்ளாா்.