இவற்றையெல்லாம் உயர்த்திவிட்டு இவற்றை மட்டும் குறைத்தது ஏன்.? மோடி அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்.!

இவற்றையெல்லாம் உயர்த்திவிட்டு இவற்றை மட்டும் குறைத்தது ஏன்.? மோடி அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்.!


rahul-gandhi-talk-about-central-govt-JAPEXV

உரங்களின் விலை, பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவரது ட்விட்டர் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். 

இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில், ஜி.எஸ்.டி., பெட்ரோல்-டீசல் மற்றும் உரம் ஆகியவற்றின் விலை, மோடியின் நண்பர்களின் வருமானம், உணவளிப்போர் மீதான வன்முறைகள் போன்றவற்றை இந்த பெருந்தொற்று காலத்தில் மோடி அரசு ஏன் உயர்த்தியது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், வேளாண் மானியம், விவசாயிகளின் வருமானம் மற்றும் மத்திய அரசின் கண்ணியம் ஆகியவற்றை குறைத்தது ஏன்?  எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதைப்போல், மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிரான மனநிலையில் இருப்பதாகவும், வேளாண் பொருட்களுக்கான விலைகளை உயர்த்தி விவசாயிகளை கொள்ளையடித்து வருவதாகவும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.