நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்.! திடீரென ராகுல்காந்தி பதிவிட்ட அதிரடி ட்வீட்.!

நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்.! திடீரென ராகுல்காந்தி பதிவிட்ட அதிரடி ட்வீட்.!


rahul-gandhi-said-i-wont-fear-3uhqhf

உத்திரப்பிரதேசத்தில் இளம் பெண் கூட்டுபலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த கொடூர சம்பவத்தால் மரணமடைந்த பெண்ணின் உறவினர்கள், பொதுமக்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்தரபிரதேசத்தின் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் பிரியங்கா காந்தி மற்றும் சகோதரர் ராகுல் காந்தி ஆகியோர் நேற்று முன்தினம் மரணமடைந்த பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக சென்றுள்ளனர். அப்பொழுது இருவரையும் போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். 

ராகுல் காந்தியை காவல்துறையினர் லத்தியால் தாக்கியதாகவும் கீழே தள்ளி விட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால், அவர் தானாக தான் விழுந்தார் என்றும் கூறப்பட்டது. ராகுல் காந்தி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், மகாத்மா காந்தியின் பிறந்த நாளான நேற்று அவரது கருத்தை நினைவுகூரும் வகையில், ராகுல் காந்தி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், இந்த உலகத்தில் யாருக்கும் நான் பயப்பட மாட்டேன். அநீதிக்கும் நான் தலைவணங்க மாட்டேன். உண்மையின் சக்தியைக் கொண்டு பொய்யை தோற்கடிப்பேன்.பொய்யை எதிர்க்கும் போது எல்லா துன்பங்களையும் என்னால் தாங்க முடியும். காந்தி பிறந்த நாளில் இதயபூர்வமான வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.