Rahul Gandhi: இந்தியாவை அமெரிக்காவிடம் ஒப்படைத்த மோடி - ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு.!
பட்ஜெட் விவாதத்தில் மோடி அரசை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் ரூபாய் மதிப்பு குறித்து பல்வேறு கேள்விகள் முன்வைத்தார்.
சர்வதேச பதற்றம்:
மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இந்தியாவை வர்த்தக ஒப்பந்தம் மூலம் அமெரிக்காவிற்கு விற்றுவிட்டதாக கடுமையாக குற்றம்சாட்டினார். சர்வதேச அரசியல் பதற்றம் நிலவும் சூழலில், அதனை கருத்தில் கொள்ளாமல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.
இதையும் படிங்க: Ajit Pawar: மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மரணம் சதியா? - பரபரப்பு குற்றசாட்டு.!
மத்திய அரசு மீது குற்றச்சாட்டு:
இந்தியாவின் உண்மையான வலிமை அதன் மக்கள் தொகை மற்றும் மனித வளம் தான் எனக் குறிப்பிட்ட ராகுல் காந்தி, அமெரிக்காவிற்கு இந்திய மக்களின் தரவு (Data) மிக முக்கியமானதாக மாறியுள்ளதாக கூறினார். இந்த பின்னணியில், இந்தியாவின் தரவுகள் மற்றும் சந்தை வலிமையை சரியான முறையில் பாதுகாக்காமல், வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் அரசு விட்டுக்கொடுப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

பேச்சுவார்த்தையில் அழுத்தம்:
மேலும், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது, இந்தியா சமநிலையான நிலையில் அமர்ந்து பேசவில்லை என்றும், பிரதமர் மோடி அழுத்தத்திற்கு உட்பட்டு செயல்பட்டதாக ராகுல் காந்தி விமர்சித்தார். இந்தியா ஒரு பெரிய பொருளாதார சக்தியாக இருந்தும், தன்னம்பிக்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தவறியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தங்கம் விலை குறித்த பேச்சு:
நிதிநிலை அறிக்கையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு, இந்திய ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக சரிவடைந்தது போன்ற முக்கிய பொருளாதார சிக்கல்கள் குறித்து எந்த தெளிவான விளக்கமும் இல்லை என்றும் ராகுல் காந்தி சுட்டிக்காட்டினார். இது பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை நேரடியாக பாதிக்கும் அம்சங்கள் என்றும் அவர் கூறினார்.