Ajit Pawar: மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மரணம் சதியா? - பரபரப்பு குற்றசாட்டு.!



Ajit Pawar Death May Involve Conspiracy Alleges Rohit Pawar Demands International Probe

மராட்டிய துணை முதல்வர் மரணம் குறித்த CID விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சர்வதேச முகமைகள் மூலம் விசாரணை நடத்த கோரிக்கை எழுந்துள்ளது.

விபத்து மரணத்தில் சந்தேகம்:

மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்த சம்பவத்தில், சதித் திட்டம் இருக்கலாம் என தேசியவாத காங்கிரஸ் (NCP) எம்.எல்.ஏ & அஜித் பவாரின் உறவினருமான ரோகித் பவார் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கடந்த ஜனவரி 28 அன்று நிகழ்ந்த இந்த விபத்து குறித்து, பல்வேறு சந்தேகங்களை எழுப்பி அவர் விரிவான விளக்கங்களை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: BREAKING: விஜய் தலைமையிலான வெற்றிக்கழக அலுவலகத்தின் முன் போலீஸ் படை குவியல்! திடீர் பரபரப்பு.!!!

போதை விமானி என குற்றச்சாட்டு:

விபத்து தொடர்பாக வரைபடங்கள் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை முன்வைத்த ரோகித் பவார், விபத்துக்குள்ளான விமான நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் விமானியின் பின்னணி குறித்து பல கேள்விகளை எழுப்பினார். விபத்து நடந்த அன்று கடைசி நிமிடத்தில் விமானி மாற்றப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அவர் கூறினார். அந்த நாளில் பணியில் இருந்த விமானி சுமித் கபூர், மது அருந்தும் பழக்கம் கொண்டவர் எனக் கூறி, அதற்கான வாட்ஸ்அப் ஆதாரங்களையும் அவர் வெளியிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் பவார்

சந்தேகம் தரும் நிகழ்வுகள்:

மேலும், விமானம் தரையிறங்கும் போது, ஏர் டிராஃபிக் கண்ட்ரோல் (ATC) அறிவுறுத்திய ஓடுதளத்தை பயன்படுத்தாமல், விமானி பிடிவாதமாக வேறு ஓடுதளத்தை கோரியதற்கான காரணம் என்ன? என்றும் ரோகித் பவார் கேள்வி எழுப்பினார். இந்த முடிவு விபத்துக்கு வழிவகுத்ததா என்ற சந்தேகமும் அவர் முன்வைத்துள்ளார். விபத்துக்கு முன் கடைசி நிமிடங்களில் விமானியிடமிருந்து எந்த தகவலும் கிடைக்காதது, மேலும் ராடார் தகவல்கள் திடீரென துண்டிக்கப்பட்டது போன்ற அம்சங்களும், இது ஒரு சாதாரண விபத்தாக இல்லாமல் திட்டமிட்ட சதியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை வலுப்படுத்துவதாக அவர் கூறினார். 

இதனைத் தொடர்ந்து, மாநில அரசின் சி.ஐ.டி (CID) விசாரணையில் தமக்கு முழு நம்பிக்கை இல்லை என்றும், இந்த வழக்கை சர்வதேச விசாரணை முகமைகள் மூலம் ஆராய வேண்டும் என்றும் ரோகித் பவார் கோரிக்கை விடுத்துள்ளார். அஜித் பவார் மரணத்தைச் சுற்றியுள்ள இந்த குற்றச்சாட்டுகள், மகாராஷ்டிர அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பையும், தேசிய அளவில் கவனத்தையும் பெற்றுள்ளன.