லாரி மீது வேகமாக மோதிய தனியார் பேருந்து! சம்பவ இடத்திலேயே பலர் பலி! கவலைக்கிடமாக பலர்!

லாரி மீது வேகமாக மோதிய தனியார் பேருந்து! சம்பவ இடத்திலேயே பலர் பலி! கவலைக்கிடமாக பலர்!


q12 people died in bus accident

புது டெல்லியில் இருந்து தனியார் பேருந்து ஒன்று நேற்று இரவு பீகார் மாநிலம் மோதிஹரி நகரம் நோக்கி புறப்பட்டது. அந்த பேருந்தில் சுமார் 45 பயணிகள் பயணம் செய்தனர். இந்தநிலையில் உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் இருந்து லக்னோ செல்லும் விரைவுசாலையில் சென்றுகொண்டிருந்தது.

 அந்த பேருந்து இரவு 10 மணியளவில் லக்னோ தேசிய நெடுச்சாலையில் சென்றுகொண்டிருந்த பொழுது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கன்டெய்னர் லாரியின் பின்னால் மோதியது.

 


இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் 12 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பல பயணிகள் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த 31 பேர் இடாவா நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்தில் உயிரழந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், காயமடைந்தவர்கள் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயர்க்கூடும் என அஞ்சப்படுகிறது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.