பழைய பையை தூக்கி குப்பை தொட்டியில் வீசிய பெண்.. 2 மணி நேரம் கழித்து காத்திருந்த அதிர்ச்சி..

பழைய பையை தூக்கி குப்பை தொட்டியில் வீசிய பெண்.. 2 மணி நேரம் கழித்து காத்திருந்த அதிர்ச்சி..


Pune women thrown 3 lakhs worth gold pack in to garbage

தீபாவளிக்கு வீட்டை சுத்தம் செய்தபோது மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கநகைகள் இருந்த பையை பெண் ஒருவர் குப்பை தொட்டியில் தூக்கி வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புனேவை சேர்ந்தவர் ரேகா செலுகார். இவர் தீபாவளி பண்டிகையாக தனது வீட்டில் இருந்த குப்பைகளை சுத்தம் செய்தபோது நீண்ட நாட்களாக வீட்டில் இருந்த பழைய ஹேண்ட்பேக் ஒன்றை குப்பை என நினைத்து குப்பை தொட்டியில் வீசியுள்ளார். குப்பை தொட்டியில் வீசிய 2 மணி நேரம் கழித்துதான் அதில் தங்கம், வெள்ளி, மாங்கல்யம் உள்ளிட்ட சுமார் 3 லட்சம் மதிப்பிலான பொருட்களை பலஆண்டுகளாக பாதுகாத்து வைத்திருந்தது அவருக்கு நினைவிற்கு வந்துள்ளது.

உடனே பதறியடித்து உளூரை சேர்ந்த சமூக சேவகர் ஒருவரை தொடர்புகொண்டு விவரத்தை கூறியுள்ளார். உடனே அவரும் புனே சுகாதாரத்துறைக்கு தகவல் கொடுக்க, அந்த பெண் குப்பை கொட்டிய பகுதியில் உள்ள குப்பைகள் அனைத்தும் குப்பை கிடங்கிற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து அந்த பெண்ணின் குடும்பத்தினை, சுகாதார ஊழியர்கள் என அனைவரும் அங்கிருந்த குப்பைகளை பலமணிநேரம் தேடி இறுதியில் அந்த பழைய ஹேண்ட்பேக்கை கைப்பற்றியுள்ளனர். இறுதியில் அந்த பெண்ணின் குடும்பத்தினர் அனைவர்க்கும் நன்றி தெரிவித்துவிட்டு அந்த பையுடன் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர்.