BREAKING: பழம்பெறும் நடிகை செளகார் ஜானகி கவலைக்கிடம்... மருத்துவமனையின் அதிர்ச்சி அறிக்கை..!!!
உடல்நலக் குறைவால் பள்ளிக்கு போகாமல்... வீட்டில் தனியாக இருந்து 9 வயது சிறுமி! பக்கத்துக்கு வீட்டுக்காரர் செய்த கொடூரம்.... மாலையில் ஓடையில் கண்ட அதிர்ச்சி!!!
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 9 வயது நான்காம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல்நலக் குறைவால் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை, பக்கத்து வீட்டைச் சேர்ந்த 25 வயது இளைஞர் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. சிறுமி மாலையில் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் தேடத் தொடங்கிய நிலையில், விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
வீட்டில் தனியாக இருந்த சிறுமி மாயம்
சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். இதையடுத்து போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், பக்கத்து வீட்டில் வசித்து வந்த சாஹில் கைரே என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்
போலீசாரின் விசாரணையைத் தொடர்ந்து சாஹில் கைரே கைது செய்யப்பட்டார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், கிராமத்திற்கு அருகே உள்ள ஓடைப் பகுதியில் மரத்தடியில் இருந்து சிறுமியின் உடல் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமி கொலை வழக்கு தொடர்பான விசாரணையை போலீசார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
தூக்கு தண்டனை கோரி சாலை மறியல்
சிறுமிக்கு நேர்ந்த கொடூரத்தை கண்டித்து உறவினர்களும் கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிக்கு கடுமையான தண்டனை, குறிப்பாக தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி புனே-நாசிக் நெடுஞ்சாலையில் சாலை மறியல் நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன், போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: அடக்கடவுளே.... திறந்த கதவோடு கீழே போன லிஃப்ட்...! கதறி துடித்த அம்மா.... குலை நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி!!!