
6 சிறுவர்கள் ஒண்ணா சேர்ந்து செய்யும் காரியமா இது?.. குண்டு வீச்சால் பரபரப்பு.!
பிளம்பர் வீட்டில் முன்விரோதம் காரணமாக வெடிகுண்டு வீசிய 6 சிறார்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரும்பார்த்தபுரம் பகுதியை சார்ந்தவர் மகேந்திரன். இவர் பிளம்பராக இருந்து வருகிறார். இதே பகுதியை சார்ந்தவர் சிவா.
சிவாவுக்கும் - மகேந்திரனுக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பும் அவ்வப்போது சண்டையிட்டு வந்த நிலையில், சம்பவத்தன்று மீண்டும் இருதரப்பு சண்டையிட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், சிவாவை சார்ந்த உறவினர்கள். மகேந்திரனின் வீட்டில் வெடிகுண்டு வீசியுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு சிவா தரப்பை சார்ந்த 6 சிறுவர்களை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement