கடும் உச்சத்தை தொட்ட பெட்ரோல் விலை.! போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்.!

கடும் உச்சத்தை தொட்ட பெட்ரோல் விலை.! போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்.!



protest-for-petrol-price-increased

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் இரு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்து வந்தது. இதனையடுத்து சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. 

அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடித்து வருகிறது. தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. 

தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 91.19 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 84.44 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஒடிசாவில் இன்று 7 மணி நேரம் முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்தது. இதன் படி, அங்கு முழு அடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. முழு அடைப்பு போராட்டத்தால், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டுள்ளது.