நடுரோட்டில் தனியார் பள்ளி மாணவிகளுக்கு இடையே பயங்கர குடுமிபிடி சண்டை..! வெளியான ஷாக் வீடியோ.!

நடுரோட்டில் தனியார் பள்ளி மாணவிகளுக்கு இடையே பயங்கர குடுமிபிடி சண்டை..! வெளியான ஷாக் வீடியோ.!


private school students fighting

கர்நாடகா தலைநகர் பெங்களூரில் ஒரே பள்ளியைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் குழு மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தனியார் பள்ளி மாணவிகள் சிலர் பள்ளியில் இருந்து வெளியில் வரும்போது கடும் வாக்குவாதம் செய்துகொண்டே வந்தனர். ஒருகட்டத்தில் வாக்குவாதம் அதிகமாகி அவர்கள் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். ஒரு மாணவி மற்றொரு மாணவியின் தலைமுடியை பிடித்து இழுத்து ஆக்ரோஷமாக தாக்கினார்.

மேலும், கையில் பேஸ்பால் மட்டைகளை வைத்துக்கொண்டு அடித்துக் கொண்டனர். பின்பு இரும்பு கதவுகளில் தலையை கொண்டு மோத செய்து சரமாரியாக தாக்கிக்கொண்டனர். மோதலில் ஈடுபட்ட மாணவிகள் அனைவரும் பெங்களூரில் உள்ள பிரபலமான பிஷ்ப் காட்டன் பள்ளியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

ஒருகட்டத்தில் மோதல் தீவீரமடைந்ததால் சம்பவயிடத்தில் கூடியிருந்த பொதுமக்கள் தலையிட்டு சண்டையை நிறுத்தியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.