இந்தியா

உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்.. முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை தகவல்.!

முன்னாள் இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தற்போது 84 வயதாகும் பிரணாப் முகர்ஜி அவர்கள் 25 ஜூலை 2012 முதல் 25 ஜூலை 2017வரை இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர். இவர் கடந்த 10 ஆம் தேதி உடல்நிலை மிக மோசமான நிலையில் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அதன்பின்னர் அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவரது மூளை ரத்த நாளத்தில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பிறகு உடல்நிலை மோசமானநிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

இதனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இந்நிலையில் பிரணாப் முகர்ஜி அவர்களுக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலையில் தற்போது வரை எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Advertisement