இந்தியா

பேருந்தை மறித்து ஓட்டுநர், நடத்துனரை தாக்கி மாமூல் கேட்டு கஞ்சா குடிக்கிகள் அட்டகாசம்.!

Summary:

பேருந்தை மறித்து ஓட்டுநர், நடத்துனரை தாக்கி மாமூல் கேட்டு கஞ்சா குடிக்கிகள் அட்டகாசம்.!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஊசுட்டேரி படகு குழாமில், மாலை 4 மணியளவில் திருக்கனூரில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் பேருந்து சென்றுகொண்டு இருந்தது. அப்போது, கஞ்சா போதையில் பேருந்தை வழிமறித்த 3 பேர் பேருந்தில் எறியுள்ளனர். பேருந்தில் நடத்துனராக இருந்த வினோத்திடம் 3 பேரும் ஊசியில் பயணம் செய்துகொள்வதாக கூறியுள்ளனர். 

பேருந்து ஊசுட்டேரி பேருந்து நிறுத்தத்திற்கு வந்ததும், அவர்களை பேருந்தில் இருந்து இறங்கக்கூறி நடத்துனர் தெரிவித்துள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த கஞ்சா போதை ஆசாமிகள், நடத்துனரிடம் மாமூல் கேட்டு அவரை தாக்கியுள்ளனர். மேலும், தங்களின் நண்பர்கள் என 5 பேர் கும்பலை வரவழைத்து, பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனரை தாக்கி இருக்கின்றனர். 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் சமாதான நடவடிக்கையில் ஈடுபட்டு, கும்பலை அங்கிருந்து செல்ல வைத்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக வில்லியனூர் காவல் நிலையத்தில் நடத்துனர் புகார் அளிக்க சென்ற பொது, அதிகாரிகள் ஆய்வுக்கு சென்றுள்ளனர் என்று பணியில் இருந்த காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். 

இதனால் நடத்துனர் அங்கேயே காத்திருந்த நிலையில், இன்று காலை 8 மணியளவில் பத்தக்கன்னு சாலை  பகுதியில் தனியார் பேருந்தை நிறுத்திய ஓட்டுனர்கள், மேற்கூறிய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி பேருந்தை இயக்க வைத்தனர். மேலும், கஞ்சா குடிக்கிகளுக்கு வலைவீசப்பட்டுள்ளது.


Advertisement