இந்தியா

கொலைத்திட்டத்திற்கு தயாரான கும்பல்.. ரவுடி பொடிமாஸ் சரத்தை பொறி இல்லாமலேயே தூக்கிய அதிகாரிகள்.!

Summary:

கொலைத்திட்டத்திற்கு தயாரான கும்பல்.. ரவுடி பொடிமாஸ் சரத்தை பொறி இல்லாமலேயே தூக்கிய அதிகாரிகள்.!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கருவடிக்குப்பம், சண்முகா நகரில் உள்ள பாய்த்தோப்பில் பயங்கர ஆயுதத்துடன் கும்பல் பதுங்கி இருப்பதாக லாஸ்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் திருமுருகன் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர். 

காவல் துறையினரின் வருகையை கண்ட கும்பல் தப்பிச்செல்ல முயற்சிக்கவே, காவல் துறையினர் கும்பலை மொத்தமாக மடக்கிப்பிடித்தனர். அவர்களிடம் இருந்து 4 வீச்சரிவாள், வெடிபொருள், திரி, நூல்கண்டு போன்றவை கைப்பற்றப்பட்டன. அவர்களிடம் நடந்த விசாரணையிக், கொலை திட்டத்திற்கு தயாராகி வந்ததும் அம்பலமானது. 

கருவடிக்குப்பம் மாரியம்மன் கோவிலை சேர்ந்த ரவுடி பொடிமாஸ் சரத் (வயது 28), பாலசந்தர், ராஜேஷ் (வயது 29), வினோத் (வயது 27), லோக பிரசாத் (வயது 20), தர்மசிவம் (வயது 23) ஆகியோர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பொடிமாஸ் சரத், வினோத் ஆகியோரின் மீது ஏற்கனவே பல கொலை, கொலை முயற்சி வழக்குகள் நிலுகையில் உள்ளது. 


Advertisement