கணவன் திட்டியதால் மனமுடைந்த மனைவி விபரீத முடிவு.. கண்ணீரில் பிள்ளைகள்.!



Pondicherry Karaikal Wife Suicide due to Husband Condemn Speaking With Me

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் நூற்பள்ளிவீதி, தீன்ஸ் பார்க் பகுதியை சேர்ந்தவர் ஹாஜிராபானு (வயது 28). இவரின் கணவர் ஹாவா நவாகதீன். இவர் கடந்த 3 வருடமாக வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். 

தம்பதியினர் இருவரும் தங்களின் தாய் - தந்தை மற்றும் தம்பி உட்பட உறவினர்களுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்த நிலையில், இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், வெளிநாட்டில் இருக்கும் ஹாஜா நவாகதீனுக்கு மனைவி போன் செய்து பேசியுள்ளார். 

Pondicherry

அப்போது, கணவர் நீ எதற்காக எனக்கு அவ்வப்போது போன் செய்து பேசுவதில்லை என்று திட்டி இருக்கிறார். இதனால் மனமுடைந்துபோன ஹாஜிரா பானு, மன வருத்தத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். 

அவரை மீட்ட உறவினர்கள் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யவே, அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக காரைக்கால் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.