போட்டிக்கு வந்த இடத்தில் சோகம்.. குத்துசண்டை வீராங்கனை மாணவி கடலில் மூழ்கி பலி.!!



Pondicherry Coimbatore College Girl died on Beach

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேட்டில், கிருஷ்ணம்மாள் மகளிர் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கல்லூரியில் பயின்று வரும் 17 க்கும் மேற்பட்ட மாணவிகள், கல்லூரி பயிற்சியாளருடன் பாண்டிச்சேரியில் நடைபெறும் குத்துசண்டை போட்டியில் பங்கேற்க சென்றுள்ளனர். இவர்கள், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பல சுற்றுலாத்தலங்களுக்கு சென்று சுற்றிப்பார்க்கவும் தொடங்கியுள்ளனர்.

நேற்று மாலை 4 மணியளவில் அனைவரும் கடற்கரைக்கு வந்த நிலையில், தலைமை செயலகம் எதிரேயுள்ள செயற்கை மணற்பரப்பில் விளையாடியுள்ளனர். பயிற்சியாளர் மற்றும் சில மாணவிகள் கடலில் இறங்கி குளித்துக்கொண்டு இருந்த நிலையில், எதிர்பாராத விதமாக ராட்சத அலையில் பயிற்சியாளர் சர்வேஸ்வரன் (வயது 25), மாணவிகள் அமிர்தா (வயது 19), பூமதி (வயது 19) ஆகியோர் சிக்கியுள்ளனர். 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அனைவரும் அவர்களை காப்பாற்றக்கூறி அலறவே, உள்ளூர் வாசிகள் கடலில் தத்தளித்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். உள்ளூர் மக்கள், காவல் துறையினர், மீட்பு படையினர் ஆகியோர் மூலமாக சர்வேஸ்வரன் மற்றும் அமிர்தா மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. 

மாணவி பூமதி மட்டும் மாயமாகிய நிலையில், அவரது உடலை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மீட்டனர். பூமதியின் மரணத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவிகள் கதறியழுதனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.