வெள்ளத்தில் தத்தளித்த சிறுமிகளை தோளில் சுமந்து காப்பாற்றிய காவலர்! குவியும் பாராட்டு! வைரலாகும் வீடியோ!

வெள்ளத்தில் தத்தளித்த சிறுமிகளை தோளில் சுமந்து காப்பாற்றிய காவலர்! குவியும் பாராட்டு! வைரலாகும் வீடியோ!



police saved 2 child in flood

தற்போது பெய்துவரும் தென் மேற்குப் பருவமழை இந்தியாவின் மேற்குப் பகுதி மாநிலங்களை புரட்டிப்போட்டு வருகிறது. மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, கேரளா, தமிழகத்தில் கனமழை கொட்டித்தீர்த்து வருவதால், பல பகுதிகள் வெள்ள காடாகியுள்ளன.

இந்தநிலையில் குஜராத் மாநிலத்தில் மழை தீவிரமாக பெய்து வருகிறது. குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அப்பகுதியில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்வதற்கு மீட்புப்பணிகள் நடந்துவருகிறது.

இந்தநிலையில் மோர்பியில் வெள்ளத்தில் சிக்கிய இரண்டு சிறுமிகளை, போலீசார் ஒருவர் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம், தோளில் சுமந்து காப்பாற்றியுள்ளார். அவர் சிறுமிகளை தோளில் சுமந்தபடி , வெள்ளத்தை கடந்து காப்பாற்றியதால் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

அந்த காவலரின் செயலை குஜராத் முதலவர் விஜய் ருபானி பாராட்டி இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், கடுமையான சூழல்களிலும் அரசு அதிகாரிகளின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்கு போலீஸ் கான்ஸ்டபிள் பிரித்வி ராஜ்சிங் ஜடேஜா ஒரு எடுத்துக்காட்டு. அவரது உறுதியைப் பாராட்டுங்கள்" என டுவீட் செய்துள்ளார்.