இந்தியா லைப் ஸ்டைல்

படேல் சிலையைப் பார்வையிட சென்று மக்கள் ஏமாற்றம்; காரணம் என்ன?

Summary:

People disappointed after going to visit patel statue

குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டத்தில் சர்தார் சரோவார் அணை அருகே கேவாதியா காலனி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது சர்தார் வல்லபபாய் படேலின் சிலை. உலகிலே உயரமான 182 மீட்டர் சிலையை நாட்டின் பிரதமர் மோடி சென்ற மாதம் 31ஆம் தேதி திறந்து வைத்தார். 

நவம்பர் 1 முதல் பொதுமக்களின் பார்வைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தினமும் சிலையைப் பார்வையிட வருகின்றனர். மக்களின் வசதிக்காக சிலையை சுற்றி பூஙாகாவும் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நேற்று சனிக்கிழமை மட்டும் 27000 பார்வையாளர்கள் ஒரே நாளில் குவிந்துள்ளனர். சிலை திறந்த பிறகு ஓரே நாளில் அதிகமான பார்வையாளர்கள் வருகைப் புரிந்தது நேற்று தானாம். 

இதில் ஒரு வருத்தமான செய்தி என்னவெனில்,  நேற்று சிலையைப் பார்வையிட சென்ற அனைவராலும் சிலையில் உள்ளே 135 உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பார்வையாளர்கள் தளத்திற்கு செல்ல முடியாமல் போனது தான். இந்த தளத்திற்கு ஒரு நாளைக்கு 5000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் சுமார் 22000 பேர் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். 

இந்த தளத்தில் இருந்து நர்மதா நதியின் அழகையும், சர்தார் சரோவார் அணை மற்றும் மலைப் பகுதிகளைத் தெளிவாக பார்க்க முடியுமாம். ஆனால் ஒரே நேரத்தில் 200 பேர் மட்டுமே அந்த தளத்தில் நிற்க முடியும். எனவே இனிமேல் சிலையைப் பார்வையிட செல்பவர்கள் இதனைக் கருத்தில் கொண்டு செல்வது நல்லது. 


Advertisement