நடிகர் ரியாஸ் கானின் மருமகள் வளைகாப்பு; நேரில் வந்து வாழ்த்திய திரைபிரபலங்கள்.!
மக்களே உஷார்!!! சிலிண்டர் எரிவாயு கசிவால் பஞ்சாபில் ஒரு குடும்பமே பலியான பரிதாபம்..!

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் வசித்து வருபவர் யஷ்பால் கய். இவர் தனது மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளோடு வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல் அனைவரும் இரவு உணவு அருந்திவிட்டு தூங்கி இருக்கின்றனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக சிலிண்டரில் இருந்து எரிவாயு கசிய தொடங்கி இருக்கிறது.
இதனால் குளிர்சாதன பெட்டியில் ஸ்பார்க் ஏற்பட்டு கம்பரசர் வெடித்திருக்கிறது. இதன் காரணமாக தீயானது வீடு முழுவதும் பரவி இருக்கிறது. இதனை அறிந்த யஷ்பால் கய் குடும்பத்தினர் சுதாரித்து கொண்டு தப்பிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் தீயானது வீடு முழுவதும் பரவியதால் வீட்டை விட்டு வெளிய வர முடியாமல் சிக்கி கொண்டனர்.
இதனையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்து தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து அவர்களை மீட்க்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக யஷ்பால் கய் அவரது மருமகள் மற்றும் பேரக்குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்டனர்.
மேலும் யஷ்பால் கய் மகன் பலத்த தீ காயங்களோடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார். இந்நிலையில் சிலிண்டர் கசிவால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.